Category: Stories & Poems

Hen

தாய்மை!

Author : AK Suganya Dinesh மழைக் காலத்தில் குஞ்சுகளின் பசி தீர்க்க காக்கை, உணவை தேடி அலைவதும்;முட்டைகளை எவரேனும் தீண்ட விடாது கோழி, இருபத்தொருநாள் அடைகாப்பதும்;ஈன்ற கன்று பால் குடித்த பிறகே பசு, மானுடனின் கை மடி தீண்ட அனுமதிப்பதும்;பெண்! தன் பசி பற்றி ஒரு நாளும் எண்ணாது, குழந்தைக்குப் பசிப்பதற்கு முன்பே சமைத்து, பின் உண்பதும்;தாய்மை என்றால்,வயது முதிர்ந்த பிச்சைக்காரன் தன் தட்டில் விழுந்த […]

சுதந்திரம் ஒரு கேள்வியே!

Author : AK Suganya Dinesh சுதந்திரம்! இந்த பாரதத்தில் நாம் வாழும் வாழ்க்கைக்கு மட்டுமல்ல!சொல்லும் சொல்லுக்கும்,செய்யும் செயலுக்கும்;அநீதிக்கு எதிரான கருத்திற்கும்,படிப்பிற்கும் பண்பிற்கும்உரியது.ஆனால், இச்சுதந்திரம் அவற்றிக்குச் சரியாகப் பயன்படுகிறதா என்றால் சற்றே தயக்கம் தான்!அன்று நம் முன்னோர்கள் பெற்று தந்த படிப்புரிமை இன்று,சட்டத்தின் ஓட்டைகளை கண்டறிந்து பெண்களை சூறையாடுவதற்கும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், செய்யும் பிழைகளையெல்லாம் செய்துவிட்டு சமூகத்தின் மேல் பழி போடவும்,பண்பு என்ற பெயரில், […]

வெற்றிடம்!

அந்தி சாய்ந்தது; சூரியக் கதிர்கள் சுருங்கத் தொடங்கின! தென்றல் காற்று மெல்ல வந்து சன்னல் கம்பிகளில் எட்டிப்பார்த்தன! பறவைகள் தன் கூட்டைத் தேடி பறக்கத் தொடங்கின! மனிதர்களின் பரபரப்பு மிகுந்த வாகனங்களின் சப்தமும் சற்றே அடங்கத் தொடங்கின! தொழிற்சாலையில் வரும் ஒலிகள் போய் ஒவ்வொரு வீட்டிலும் ஒளிவீசத் தொடங்கின! பள்ளி மணியோசை அடங்கி, கோவில் மணியோசை கேட்கத் தொடங்கின! சிறுவர்கள் ஆசிரியர்களிடமிருந்து விடுபட்டு அன்னையின் அரவணைப்பில் துயிலத் […]

மீளமுடியாமல்…

நெருப்பை ஜோதி என்று நினைத்து அள்ளிக் கொண்டேன், நான் காகிதக் கப்பல் என்பதையும் மறந்து!இறுதியில் கருகியது நான் மட்டுமல்ல, என்னைப் படைத்தவனின் கற்பனையும் தான்!                                                     – சுகன்யா அ.க.

பணம் என்னும் நெருப்பு!

Author: AK Suganya Dinesh பணமே! உன்னால் எத்தனை சூழ்ச்சிகள்! எத்தனை வீழ்ச்சிகள்! நீ விழுங்கிய உடல்கள் எத்தனையோ? நீ ஏழையின்  பகையாய் இருப்பதால் அவன் வறுமை  என்னும்  நெருப்பில் வேகிறான்; நீ செல்வந்தனின்  நண்பனாய் இருப்பதால் அவன்  ஆணவம் என்னும்  தீயில் எரிகிறான். நீ மருத்துவரின் கையில்  இருப்பதால் அவன் புதுப்புது நோய்களை தருகிறான்; நீ சாமானியனின் கையில் இருப்பதால் அவன் ஆசை என்னும் தீயில் எறிகிறான். நீ வாலிபனின் கையில் இருப்பதால் […]